மகாராஷ்டிராவில் நடக்கும் விஷயங்களைப் பார்த்து, நான் மகிழ்ச்சி அடைய வேண்டும், ஆனால் வருத்தப்படுகிறேன் என்று தேவேந்திர ஃபட்னாவிஸின் பதவி விலகல் குறித்து கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி ட்விட் செய்துள்ளார். மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் பதவியிலிருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் நேற்று பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவியிலிருந்து தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவி விலகுவதாக அறிவித்தார். மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சராக சிவசேனாவின் உத்தவ் தாக்ரே நாளை […]
