மும்பை கிளம்பிய ரஜினியை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் உருவாகும் படம் தர்பார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிக்காக ரஜினிகாந்த் இன்று மும்பை செல்கிறார். மும்பை கிளம்புவதற்கு முன்பு இவரை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சந்தித்துள்ளார். சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் ரஜினியின் வீடு உள்ளது. அங்கு சென்ற கே.எஸ்.ரவிக்குமார், ரஜினியுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் […]
