வேன் சக்கரத்தில் சிக்கி ஒரு வயது பெண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாப்பர்த்தி கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு வயதுடைய மேகவர்ஷினி என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் குழந்தை வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பால் ஏற்றும் வேன் குழந்தை மீது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. […]
