கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் மலை கிராமத்தில் ஆனந்தன் என்பவர் வசித்துவருகிறார். இவரும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பர்வதனள்ளி கிராமத்தில் வசிக்கும் அங்கமுத்து என்பவரும் இணைந்து கோட்டையூர் மலை கிராமத்தில் கிளினிக் வைத்து நடத்தி வந்துள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் முறையாக மருத்துவம் படிக்கவில்லை. இந்நிலையில் இவர்கள் இருவரும் கோரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து […]
