மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த மின்வாரிய அதிகாரி மீது கார் ஏறி இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள விஸ்வநாதபுறத்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சுஜாதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் முருகன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது நிலைதடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து கீழே […]
