ஊரடங்கால் கோயம்பேடு வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு ஒரு நாள் கட்டணம் மட்டுமே வசூல் செய்ய சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்தில் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் சென்ற பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பேருந்து நிலையம் வாகன நிறுத்துமிடத்தில் விட்டு […]
