அரியலூர் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 34 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், புதிதாக 168 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பாதிக்கப்பட்டுள்ள 168 பேரில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையில் மூலம் தொற்றுக்கு ஆளானவர்கள் என்பது தெரியவந்துள்ளது. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி பரிசோதனை மையத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கான தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா […]
