கோவிலில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குளக்கரை பகுதியில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த கோவிலில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும் மற்றும் ரேடியோ, அர்ச்சனை பொருட்கள் ஆகியவற்றில் திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக கோவில் நிர்வாகம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவில் உண்டியலை […]
