கூத்தாநல்லூர் அருகே அத்திக்கடையில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டிலிருந்து 220 சவரன் தங்க நகைகளும், ரூ.7 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையைச் சேர்ந்த 34 வயதுடைய கொ. சர்புதீன் என்பவர் நேற்று தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு அத்திக்கடையிலுள்ள மற்றொரு தெருவில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். பின்னர், நேற்று மாலை மீண்டும் வந்து பார்த்த போது வீட்டுக் கதவின் பூட்டு மற்றும் பீரோக்களின் கதவுகள் உள்ளிட்டவை உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததைப் பார்த்து […]
