லாரி ஓட்டுநரை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள எழுமேடு அகரம் பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் களிஞ்சிகுப்பம் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் வடிவேல் சென்று கொண்டிருக்கும் போது 2 நபர்கள் திடீரென்று வழிமறித்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக […]
