4 வாலிபர்கள் ஆட்டோவை வழிமறித்து கண்ணாடியை உடைத்து ஓட்டுனருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள டி.எடப்பாளையம் கிராமத்தில் அர்வாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த 4 மாணவிகளை தனது ஆட்டோவில் அழைத்துக்கொண்டு டி.எடப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது 4 மர்ம நபர்கள் திடீரென ஆட்டோவை வழிமறித்து அர்வாசிடம் தகராறு […]
