Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதுக்கா இப்படி பண்ணுவ… 1௦௦ ரூபாயை பறித்தவர்… கைது செய்த காவல்துறை…!!

கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வேப்பங்குடி கிராமத்தில் வசந்தகுமார் என்ற விவசாயி வசித்துவருகிறார். இவர் அங்குள்ள ஆற்று பாலத்தின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரில் வசித்து வரும் முருகேசன் என்பவர் அங்கு வந்துள்ளார். இதனையடுத்து முருகேசன் திடீரென கத்தியை காட்டி மிரட்டி வசந்தகுமாரிடமிருந்த நூறு ரூபாயை பறித்து சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து பூதலூர் காவல் நிலையத்தில் வசந்தகுமார் புகார் அளித்துள்ளார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வீட்டினுள் பூட்டி வைத்து… கத்தி முனையில் மிரட்டல்… மிரள வைத்த கொள்ள சம்பவம் …!!

கள்ளக்குறிச்சியில் ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி முனையில் ஒரு குடும்பத்தினரை மிரட்டி அங்கிருந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கத்தில் ஜோதிமணி-சாந்தா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஜோதிமணி பழைய மோட்டார் சைக்கிளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் 5 பேர் இணைந்து ஜோதிமணியின் வீட்டு கதவை தட்டிய சத்தம் கேட்டு வீட்டின் முன்பகுதியில் தூங்கிக்கொண்டிருந்த சாந்தாவின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என்கிட்ட இல்லை… அதுக்குனு இப்படியாடா பண்ணுவ… வசமாக சிக்கிய நண்பர்…!!

புத்தாண்டு பண்டிகை கொண்டாட நண்பர் பணம் தராத காரணத்தால் அவரை கத்தியால் வெட்டிய நபரை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அருந்ததியர் தெருவில் கௌதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்மணி என்று ஒரு நண்பர் உள்ளார். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் பொருட்டு கேக் வாங்குவதற்காக ரூபாய் 200-ஐ தமிழ்மணி கவுதமிடம் கேட்டுள்ளார். ஆனால் தமிழ் மணிக்கு கௌதம் பணம் கொடுக்கவில்லை. இதனையடுத்து நண்பர்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்… 2 இளைஞர்களை தூக்கி சென்ற போலீஸ்..!!

ஓட்டேரியில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 2 இளைஞர்களை போலீசார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஓட்டேரி பொன்னன் தெருவில் இளைஞர்கள் சிலர் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதாக வேப்பேரி போலீசாருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது.. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் அவர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

30 மணி நேரம்… நெஞ்சில் சிக்கியிருந்த கத்தியை… அகற்றி சாதித்த மருத்துவர்கள்..!!

கத்தியால் குத்தப்பட்ட பெண்ணின் உடலில் 30 மணி நேரம் சிக்கியிருந்த கத்தியை அகற்றி கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கொட்ட ராஜா நகரில் வசித்து வருபவர் பால்ராஜ். இவருக்கு மல்லிகா(40) என்ற மனைவி உள்ளார்.. இந்நிலையில் கடந்த மாதம் 25ஆம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக மல்லிகாவை ஒரு நபர் கத்தியால் ஓங்கி குத்தியுள்ளார். அந்த கத்தி 7 அங்குலம் இருந்ததால் அவருடைய நெஞ்சு பகுதியில் பாய்ந்தது. இதனால் மல்லிகா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பட்டா கத்தியால் கேக் வெட்டிய புள்ளிங்கோ : திருமண நாளில் முன்னாள் ரூட் தல கைது!

சென்னை அடுத்த திருவேற்காட்டில் நண்பனின் திருமணதன்று பட்டா கத்தியுடன் சக நண்பர்கள் கேக் வெட்டி கொண்டாடி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவேற்காட்டில்  உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாப்பிள்ளையின் நண்பர்கள் சிலர் நான்கு அடி உயர  பட்டாகத்தியால் கேக் வெட்டி கொண்டாடினர். அது மட்டுமன்றி மற்றொரு மாணவன் பட்ட கத்தியோடு நடனமாடும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ரவுடி பினு […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் காங்கிரஸ் அமைச்சருக்கு வெட்டு… கர்நாடகாவில் பரபரப்பு..!!

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் தாக்குதலுக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் நரசிம்மராஜ தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தன்வீர் சேட். கர்நாடக மாநிலத்தின் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரான இவர், நேற்றிரவுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரை, அங்கு வந்த இளைஞர் ஒருவர் திடீரென்று கத்தியால் குத்தி விட்டு ஓடினார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவர் வலியால் துடித்தார். கழுத்துப் பகுதியில் வெட்டு காயமடைந்த அவர், […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கணவனை பிரிந்த மனைவி கழுத்தறுத்து கொலை” போலீசார் விசாரணை…!!

உதகை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த நொண்டிமேடு பகுதியில் வசித்துவருபவர் உமா. இவருக்கும் இவரது கணவருக்கும் அடிக்கடி ஏற்பட்டுவந்த பிரச்சனையின் காரணமாக கணவரை பிரிந்து, தனது 2வது மகன் அபிஷேக்குடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது மூத்த மகன் உமாசங்கர் கோவையில் பணிபுரிந்து வருகிறார்.   இந்நிலையில் இரவு பணியை முடித்துவிட்டு வீடுதிரும்பிய அபிஷேக் வீட்டின் படுக்கை அறையில் தன் தாயார் கழுத்து அறுப்பட்ட நிலையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீடுபுகுந்து கத்தியை காட்டி மிரட்டி 25 சவரன் நகை கொள்ளை…!!

கவுந்தப்பாடி அருகே வீடு புகுந்த மர்மநபர்கள்  பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 25 சவரன் நகைகளை கொள்ளையடித்துசென்றுள்ளனர். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்த துரைராஜ்  இரவு வெளியே சென்றிருந்தபோது அவர் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் நான்கு பேர்  துரைராஜின் மனைவி சாந்தி, மகள் கிருத்திகா உள்பட நான்கு பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து அணைத்து நகைகளையும் கழட்டுமாறு கேட்டுள்ளனர் அவர்களுள் ஒருபெண் சத்தமிட்டபோது ஒரு கொள்ளையன் கத்தியால் தன் கையை அறுத்து இதேபோல் உங்கள் கழுத்தையும் அறுப்போம் என […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனை ஊழியருக்கு கத்திக்குத்து…!!

  சிவகங்கை அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் நேரு பஸார்  தெருவில் வசித்து வருபவர் தமிழ்செல்வன். அவர்  அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் வேலையில் ஈடுபட்டிருந்த போது, அவரைநோக்கி வேகமாக வந்த ஒக்கூரைச்  சேர்ந்த அருண்குமார் என்ற வாலிபர் தான்  மறைத்து வைத்திருந்த கத்தியால் தமிழ்ச் செல்வனை சரமாரியாக குத்தினார்.   இதில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து  சரிந்து விழுந்த தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே […]

Categories

Tech |