கன்னியாகுமரியில் டியூசன் ஆசிரியரை 16 வயது மாணவன் கத்தியால் குத்தி தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் பிஎட் பட்டம் முடித்த 25 வயது இளம்பெண் தனது வீட்டில் 15 மாணவ மாணவிகளுக்கு டியூஷன் வகுப்பு எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்குள் ஆள் இல்லாத சமயத்தில் நுழைந்த 16 வயது சிறுவன் ஒருவன் ஆசிரியரிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். பின் ஆசிரியர் சத்தமிட உன்னை சும்மா விட்டால் […]
