கென்யாவில் கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்து தப்பிச்சென்ற 10க்கும் மேற்பட்டோர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி உஹீரு கென்யாட்டா (Uhuru Kenyatta) தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் காட்டு தீயை போல வேகமாக பரவிவரும் நிலையில், வெளிநாட்டில் இருந்து தங்களது சொந்த நாட்டிற்கு வந்தவர்கள் அனைவரும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருக்கும் மையத்தில் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் தப்பி ஓடிவிட்டதாக […]
