பிரபல தொழிலதிபரை கொல்லும் முயற்சியில் பெட்ரோல் குண்டு வீசியதில் தீக்காயமடைந்த தொழிலதிபரின் மனைவி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள உத்தனப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தபாபு. இவரது மனைவி நீலிமா. இவர் அப்பகுதியில் அட்டை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இவரும் இவரது மனைவியும் கடந்த 11ஆம் தேதி வழக்கம்போல் தொழிற்சாலைக்கு காரில் சென்றுள்ளனர். ஆனால் திரும்பும்பொழுது வேலை இருந்ததால் ஆனந்தபாபு மனைவியை மட்டும் வீட்டிற்கு போகுமாறு […]
