அரசின் நிதி அதிகாரத்தில் தனக்கும் பெரும் பொறுப்பு உள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். புதுச்சேரி நிகழ்வுகள் மற்றும் மக்கள் குறைகேட்பு குறித்த செய்திகள் ஒரு கண்ணோட்டம் என்ற தலைப்பில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புத்தகம் வெளியிட்டு வருகிறார். அதன்படி கடந்த ஆண்டில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்புகளை உள்ளடக்கிய புத்தகத்தை, ஆளுநர் நேற்று வெளியிட்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இவ்விழாவில், புத்தகத்தினை அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் பெற்றுக் கொண்டனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, […]
