மலையாள ஜனப்பிரிய நாயகன் என்ற அந்தஸ்துடன் வலம்வரும் நடிகர் திலீப் நடிக்கும் ‘கேஷு ஈ வீடின்டே நாதன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீப், எந்த ஒரு காதாபாத்திரத்தையும் ஏற்று நடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் வல்லமை படைத்தவர். தன்னுடைய மாறுபட்ட நடிப்பால் மலையாளத் திரையுலகில் தனித்து நிற்கும் திலீப், வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்துவருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகியுள்ள மை சான்டா திரைப்படம் […]
