நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பொழுது பெண் ஒருவர் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக புறம்போக்கு நிலத்தில் சிலர் கடைகள் மற்றும் வீடுகளை கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இதனால் கடந்த 2019ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தில்லை நடராஜன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதன்பின் வழக்கு விசாரணை முடிந்து அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மதுரை ஐகோர்ட் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் […]
