மலப்புரம் மாவட்டத்தில் பலத்த காயங்களுடன் சிகிச்சைப் பெற்றுவந்த ஆண் யானை நேற்று பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள அர்தலாகுன்னூ பகுதி அருகே ஒரு தோட்டத்தில் கடந்த வாரம் பலத்த காயங்களுடன் ஆண் யானை ஒன்று விழுந்துகிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத் துறையினர், யானையை மீட்டு கால்நடை மருத்துவமனையில் அனுமதித்தனர். தலைமை கால்நடை மருத்துவர் அருண் சக்காரியா தலைமையில் அதற்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று (ஜூன் […]
