கேரள அரசு, பாக்கியஸ்ரீ உள்பட பல்வேறு லாட்டரிச் சீட்டுகளை நடத்தி வருகிறது. பண்டிகை காலங்களில் இந்த லாட்டரிச்சீட்டுகள் மூலம் பம்பர் பரிசு குலுக்கலும் நடத்தப்படுகிறது. லாட்டரிச்சீட்டுகளை வாங்கும் பலரும் பரிசு பெற்று வருகிறார்கள். கேரளாவை சேர்ந்த தொழிலாளி ஒருவர் மனைவியின் விருப்பத்திற்காக வாங்கிய லாட்டரிச்சீட்டுக்கு ரூ.70 லட்சம் பரிசு கிடைத்து அவரை அதிர்ஷ்டசாலியாக மாற்றி உள்ளது. அவரது பெயர் சிவன். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள செட்டிகுளங்கரையை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளியான இவருக்கு ஓமணா என்ற […]
