அஜய் தேவ்கான் நடிக்கும் ‘மைதான்’ திரைப்படத்தில் நடிக்க புதிதாக நடிகை பிரியாமணி ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் நடிக்க ஒப்பமாகியிருந்த நிலையில் அவருக்குப் பதிலாக பிரியாமணி நடிக்கவுள்ளார். தேசிய விருது பெற்ற நடிகையான பிரியாமணி, இந்தி இணையத் தொடரான ‘த ஃபேமிலி மேன்’ தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது நடிகர் அஜய் தேவ்கான் நடிப்பில் உருவாகிவரும் ‘மைதான்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், பிரியாமணி. கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து […]
