தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த், அடுத்ததாக நடித்து வரும் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 9-ந் தேதி வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் 168-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. சிவா இயக்கும் […]
