மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்திருக்கும் நிலையில் நீர்மட்டம் 115 அடியை எட்டியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழையின் காரணமாகவும் கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பின. இந்நிலையில் பாதுகாப்பு கருதி அந்த அணைகளில் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. மேட்டூர் அணையில் வினாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி வரை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு […]
