பீகாரில் 45 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் பேருந்து நடத்துநரும், ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பிகார் மாநிலம் கதிஹார் நகரில் உள்ள முசாபர்பூரிலிருந்து சிலிகுரிக்கு 45 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து டுமர் கிராமத்திற்கு அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலை-31 அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தந்த நிலையில், காயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் […]
