மூடப்படாத ஆழ்துளைக் கிணறை மூடக்கோரி தொலைபேசி மூலம் கோரிக்கை விடுத்த இளைஞரை கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய ஆடியோ சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவிவருகிறது. திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித் வில்சன் 80 மணி நேர போராட்டத்திற்கு பின்பு சடலமாக மீட்கப்பட்டார். குழந்தையின் மரணம் இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை மூடக்கோரியும் அதில் […]
