சாலையை கடக்க முயன்ற போது மூதாட்டி மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலணியில் வீரம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக எல்லைபாதை பகுதியிலுள்ள புளியூர்- உப்பிடமங்கலம் சாலையை மூதாட்டி கடக்க முயற்ச்சி செய்துள்ளார். அப்போது புளியூரில் இருந்து உப்பிடமங்கலம் நோக்கி வேகமாக சென்ற இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் மீது மோதிவிட்டது. இதில் தூக்கி […]
