சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் துவங்கி அனைவரோடும் நட்பு கொண்டவர் கருணாநிதி. தஞ்சை மாவட்டம் திருவாரூர் அருகில் திருக்குவளையில் தாய் அஞ்சுகம் தந்தை முத்துவேலுவுக்கும் மகனாகப் பிறந்தார் கருணாநிதி. விவசாயக் குடும்பத்தில் பிறந்த கருணாநிதியின் தந்தை சிறந்த புலவரும் கவியரசரும் ஆவார். இசை கலைஞர்கள் சமூகக் கொடுமைகளை அனுபவித்த காலமது. சட்டை போடக் கூடாது, செருப்பு அணியக்கூடாது, துண்டினை தோளில் அணியக்கூடாது என வரைமுறைகள் இருந்ததாலேயே இசைக்கருவிகள் கற்பதில் கருணாநிதிக்கு நாட்டம் […]
