தூத்துக்குடி படத்தின் மூலம் பிரபலமான நடிகை கார்த்திகா தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி விட்டார். ‘தூத்துக்குடி’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளவர் கார்த்திகா. இந்த படத்தில் “கருவாப்பையா கருவாப்பையா” என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் பெரிதும் இடம் பிடித்தவர் கார்த்திகா. இதை தொடர்ந்து தைரியம், மதுரை சம்பவம், ராமன் தேடிய சீதை, நாளைய பொழுதும் உன்னோடு போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் தங்கையின் படிப்பு காரணமாக மும்பையில் சில வருடங்கள் கார்த்திகா வாழ்ந்து வந்தார். தற்போது தங்கையின் படிப்பு முடிந்துள்ள நிலையில் அவர் சென்னை திரும்பியுள்ளார். […]
