எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பதற்குக் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் 4,281 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 111ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் உள்பட எம்.பி.க்களின் சம்பளத்தில் 30% குறைக்கப்படுவதாக மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். எம்.பி-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்கப்படுகிறது. […]
