கர்நாடகாவில் நிலையான ஆட்சிக்காக மக்கள் பாஜகவை தேர்ந்தெடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தல் பரப்புரையின்போது தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஐந்து கட்டமாக நடைபெறுகிறது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஹசரிபாக் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். நேற்று வெளியான கர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தல் குறித்து பேசிய அவர், “கர்நாடக மக்களை ஏமாற்றிவிட்டு தப்பித்து விட முடியாது என்பதை காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா […]
