கர்நாடக சட்ட பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து சபாநாயகர் சரியான முடிவெடுத்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்று முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேர் ராஜினாமா செய்ததை அடுத்து சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பாஜகவினரால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது. ஆனால் ஆளுகின்ற அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதில் காலம் தாழ்த்தி வருகிறது. ஆகையால் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு சபாநாயகரை உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்துமாறு […]
