கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க இங்கு சமைக்கப்படும் ‘சின்ன வெங்காய ஊத்தப்பம்’ சாப்பிடுங்கள் என்று தனியார் உணவகம் ஒன்றில் விளம்பரம் செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா என்கிற அரிய வகை வைரஸ் காய்ச்சல், சீனா முழுவதும் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வகை வைரஸ் காய்ச்சலினால் சீனாவில் மட்டும் தற்போதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனர்கள் மட்டுமின்றி, அந்நாட்டில் தங்கியிருக்கும் பிற நாட்டவருக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் […]
