காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது, 70 லட்சம் மக்கள் முடக்கப்பட்டனர் என உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் சார்பாக வழக்கில் ஆஜராகிய கபில் சிபல், மத்திய அரசின் நடவடிக்கையால் 70 லட்சம் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டது, இதுபோல் சுதந்திர இந்தியாவில் நடந்ததில்லை” எனத் தெரிவித்தார். […]
