லாரி மீது டெம்போ மோதிய விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கடியப்பட்டணம் பகுதியில் ஏசுதாஸ்(57) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு டெம்போவில் அதே பகுதியை சேர்ந்த ஜான் பேபின்(50), அமல ஜஸ்டின்(42), பிரான்சிஸ்(56), கனகராஜ்(56), ததேயுஸ்(49) ஆகியோருடன் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து டெம்போவில் மீன் லோடு ஏற்றிக்கொண்டு நேற்று அதிகாலை புறப்பட்டார். இந்த டெம்போவை ராஜேஷ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் அளத்தங்கரை பகுதியில் சென்று கொண்டிருந்த போது […]
