கான்பூரில் காணாமல் போன ஒருவர் இறந்துவிட்டதாக நினைத்து அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்கு செய்து முடித்த நிலையில், 2 நாள்களுக்கு பின் அவர் மீண்டும் வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூரில் கர்னல் கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் தான் அகமது ஹாசன். இவர் தன்னுடைய மனைவியுடன் சண்டைபோட்டுவிட்டு கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே கோபத்துடன் சென்றார்.. பின்னர் நீண்ட நேரமாகியும் கணவர் வீட்டுக்கு வராததையடுத்து, குடும்பத்தினர் போலீசில் புகாரளித்தனர்.. […]
