என்னதான் கருணாநிதியை நீங்கள் ஆத்திரமாக திட்டினாலும் நேருக்கு நேர் சந்தித்தால் எந்த பெரிய மனிதரும் அவரிடம் சரணாகதி அடைந்து விடுவார்கள் கருணாநிதி குறித்து கண்ணதாசன் கூறிய வார்த்தைகள் இவை. அப்படி எழுதிய கண்ணதாசன் சரணாகதி அடைந்த இடம் தான் கருணாநிதியின் நட்பு. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் இருக்கும்போதுதான் நடிகர் எம் ஜி சக்கரபாணி தொடர்பு கண்ணதாசனுக்கு கிடைத்தது. சக்கரபாணி மூலம்தான் கருணாநிதி என்கிற பெயர் கண்ணதாசனுக்கு அறிமுகமானது. சக்கரபாணி ஒருநாள் சேலம் அம்பிகா தியேட்டருக்கு கண்ணதாசனும் சக்ரபாணியும் […]
