காஞ்சிபுரத்தில் காவல்துறை குறித்த அவதூறு வீடியோ பரப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் காவல்துறை அதிகாரிகள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் என்பவரது மொபைல் வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்று வந்தது. அதில் ஒரு வாலிபர் காவல் நிலையத்திலிருந்து கையில் இரண்டு அரிவாளுடன் வெளியில் வருவது போலவும், அவருக்கு பின்னால் இருந்து இரண்டு நபர்கள் நடந்து வருவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அது கொலை மிரட்டல் விடுப்பது […]
