கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பல்லாவரத்தையடுத்த திரிசூலம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்துவருவதாக பல்லாவரம் காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்துகொண்டிருந்தது. இதனையடுத்து காவல் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு கும்பல் ரகசியமாக கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது. இதையடுத்து அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர், பல்லாவரம் காவல் […]
