சாலையில் நடந்து சென்ற பெண் மீது வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கரசங்கால் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் லட்சுமிபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேஸ் சிலிண்டர் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வாலாஜாபாத்-வண்டலூர் சாலை அருகாமையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் லட்சுமிபதி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த லட்சுமிபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த […]
