ரயிலில் கடத்திய கஞ்சாவை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ரயில்வே காவல்துறையினருக்கு ரயிலில் கஞ்சா கடத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அரக்கோணம் வழியாக செல்லும் ரயில்களில் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது ஆலபுழாவை நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்து நின்றது. இதனையடுத்து அந்த ரயிலில் ஒவ்வொரு பெட்டியாக ஏறி ரயில்வே காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். இதில் ஒரு பெட்டியில் கழிவறை […]
