அரசியலுக்கு வந்துப்பார் என்று சவால் விட்டவர்கள் இப்போது ‘ஏன்டா வந்த? என்று கேட்கின்றனர். ‘என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கெல்லாம்? என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் இன்று மாலை தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆதிக்கவாதிகளும் வேண்டாம்- அடிமைகளும் வேண்டாம்! ஊழலற்ற ஆட்சி அமைய எங்களுக்கு வாக்களியுங்கள்! என்னும் அதிமுக விளம்பரத்தையும், மோடியின் ஆட்சி […]
