அன்னை நாட்டின் அடிமை விலங்குடைந்து முக்கால் நூற்றாண்டு முடியப்போகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.. 75வது குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.. அந்த வகையில் பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன்னுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்.. அவர் கூறியதாவது, அன்னை நாட்டின் அடிமை விலங்குடைந்து முக்கால் நூற்றாண்டு முடியப்போகிறது. […]
