கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து நடிகர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தளர்வுகளின் அடிப்படையில், பல செயல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட சமயத்திலும், தியேட்டர்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள் உள்ளிட்டவை திறப்பதற்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதே போல், பொது இடங்களில் மதம், அரசியல் தொடர்பான […]
