ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கியதால் பாதயாத்திரையாகச் சென்ற பெண் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குதிரை சந்தை கிராமத்தில் ரெங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இவர் ஆண்டுதோறும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து பாதயாத்திரையாக செல்வது வழக்கம். இந்நிலையில் திவ்யா இந்த ஆண்டும் மாரியம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். அவரோடு குழந்தைகளான முத்தரசன், கனிமொழி ஆகியோரும் சென்றுள்ளனர். பக்தர்கள் அனைவரும் […]
