தாய் கண்டித்ததால் மனமுடைந்த மகள் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நாவலூர் கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வைத்தீஸ்வரி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது அக்கா சூர்யாவிற்கு வாங்கி வந்த புது ஆடையை வைத்தீஸ்வரி அணிந்துள்ளார். இதனால் அவரது தாய் கங்காதேவி அவரை கண்டித்ததால் மனமுடைந்த வைத்தீஸ்வரி விஷம் குடித்துள்ளார். இதனை அடுத்து […]
