கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் மார்க்கெட் வீதியில் இருக்கும் கூட்டுறவு நகர வங்கியில் பழனி என்பவர் உதவி கிளை மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 1998-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக போலியான மதிப்பெண் சான்றிதழை கொடுத்து பழனி வேலையில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இது தொடர்பாக கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது பழனி மீதான புகார் உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிகாரிகள் அவரை தற்காலிகமாக […]
