உடற்பயிற்சி கூடம் மற்றும் அம்மா பூங்காவை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கரீம்ஷாதக்கா பகுதியில் இருக்கும் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது உடற்பயிற்சி கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காகவும் மற்றும் பூங்காவை முறையாக பராமரிப்பதற்கும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் 28 சென்ட் பரப்பளவில் இருக்கும் கல்வட்டக்குழி இடத்தை ஆய்வு […]
