கள்ள நோட்டு தயாரித்த கும்பல் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் கடைவீதியில் இருக்கும் ஒரு பெட்டி கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு ஒரு நபர் 500 ரூபாய் கொடுத்துள்ளார். அதை வாங்கிய கடைக்காரர் அது கள்ள நோட்டு என்பது அறிந்து கொண்டு அந்த நபரிடம் கேட்டதற்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் ஏற்பட்ட கடைக்காரர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். […]
