குப்பத்தில் தேங்கி இருந்த கழிவுநீரை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள கந்தசாமி தெருவில் கால்வாய் அடைக்கப்பட்டு மழைநீர் மற்றும் கழிவு நீர் தேங்கி சாலையில் குட்டை போல் நின்றுள்ளது. இந்நிலையில் நகர்மன்றத் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் துப்புரவு அலுவலர் செல்வம் மற்றும் சக்திவேல், கவுன்சிலர் சத்யா மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஓட்டல்களில் இருந்து வெளியேற்றப்படுகின்றன கழிவுகள் அடைத்து கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனை […]
