கிரிக்கெட் விளையாடிவிட்டு கற்களை தண்டவாளத்தில் போட்டு சென்ற சிறுவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கேரள மாநிலத்திலுள்ள பாலக்காட்டில் இருந்து பழனி வழியாக சென்னைக்கு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியிலிருந்து அனுமந்த நகர் இடையே வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் ரயில் நிலையத்தின் அருகில் வந்து கொண்டிருந்ததால் குறைவான வேகத்தில் வந்துள்ளது. அப்போது குளிர்சாதனப் பெட்டியின் அடிப்பகுதியில் ஏதோ உரசுவது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதனால் இன்ஜின் ஓட்டுனர் உடனடியாக […]
